வைகை அணையில், திருவிழாவுக்காக தண்ணீர் தி றப்பு:

வைகை அணையில் தண்ணீர் திறப்பு:

மதுரை:

மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழாவிற்காக, வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது .
மதுரையில் ஆண்டுதோறும், உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது.
மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு ,வைகை அணையில் இருந்து இம் மாதம் 11 ம் தேதி மாலை 6 மணிக்கு தண்ணீர் திறக்கப்படவுள்ளது.
16ஆம் தேதி வரை 216 மில்லியன் கனஅடி தண்ணீரை திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மதுரை நகரில் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பம் நிலவியது.
இதை தவிர்க்கும் வகையில், மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் மழை பெய்தது.
இதனால் மாலை நேரங்களில் குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியுள்ளது .
இந்த நிலையில், வைகை அணையில் தண்ணீர் திறப்பது மதுரை மக்களை மகிழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: