திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு:
மதுரை:
திருமங்கலம் அரசு மருத்துவமனையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம்,
,
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டு ‘ இன்னுயிர் காப்போம் திட்டத்தின்’ கீழ் சிகிச்சை பெற்று வரும் நபர்களிடம் கலந்துரையாடினார்கள். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சித் தலைவர் அணிஷ்சேகர், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் உடன் உள்ளார்கள்.