வகையில்தான் இறங்கும் இடத்தை ஆய்வு:

மதுரை மாநகராட்சி
கள்ளழகர் எழுந்தருளும் ஆழ்வார்புரத்தில், மேயர்
வ.இந்திராணி பொன்வசந்த் ஆய்வு:

மதுரை:

மதுரை மாநகராட்சி சித்திரை திருவிழா கள்ளழகர் எழுந்தருளும் வைகை ஆற்று பகுதியான ஆழ்வார்புரத்தில்,
மேயர்
வ.இந்திராணி பொன்வசந்த் , மாநகராட்சி ஆணையாளர் மருத்துவர்.கா.ப.கார்த்திகேயன், ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
மதுரை மாநகரில் சித்திரை திருவிழாவினை வெகு சிறப்பாக நடத்திட, மதுரை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிக்களான மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம், எதிர்சேவை, அழகர் ஆற்றில் இறங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
அவற்றில் முக்கிய நிகழ்வான அருள்மிகு கள்ளழகர் எழுந்தருளும் வைபவம் 16.04.2022 அன்று சிறப்பாக நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாட்டு பணிகளான தண்ணீர் தொட்டி கட்டுதல், ஆற்றுபடுகையை சீரமைத்தல், குடிநீர் தொட்டிகள் வைத்தல், கழிப்பறை வசதிகள், மின்விளக்கு பொருத்துதல், சாலைகள் சீரமைக்கும் பணிகள் குறித்து, மேயர், ஆணையாளர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில், நகரப்பொறியாளர் அரசு, உதவி ஆணையாளர் சுரேஷ்குமார், உதவி செயற்பொறியாளர் அலெக்ஸ்சாண்டர், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், சுகாதார அலுவலர் சிவசுப்பிரமணியன், உதவிப்பொறியாளர் சந்தனம். கள்ளழகர் திருக்கோவில் உதவிப் பொறியாளர் கிருஷ்ணன், மாமன்ற உறுப்பினர் லோகமணி உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: