சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம், வாழ்த்து பெ ற்ற தடகள வீரர்:

மாவட்ட ஆட்சியர் வாழ்த்து பெற்ற தடகள வீரர்:

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம்
தேசிய அளவில், மாற்றுத்
திறனாளிகளுக்கான தடகளப் போட்டியில்
கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கம் வென்ற வீரர் எஸ்.வினோத்குமார்,
மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி,
சந்தித்து வாழ்த்து பெற்றார்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், சீவல்பட்டியை சேர்ந்த எஸ்.வினோத்குமார் என்ற மாற்றுதிறனாளி விளையாட்டு வீரர் ,38 என்ற பிரிவில் கடந்த 28.03.2022 அன்று ஒரிசாவில் உள்ள புவனேஸ்வரில் நடைபெற்ற தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிக்கான தடகளப் போட்டியில் 100 மீட்டர் போட்டியில் கலந்து கொண்டு, வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளர்.
எஸ்.வினோத்குமார், தான் வென்ற வெள்ளிப்பதக்கத்துடன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்நிகழ்வின் போது, மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார், தடகளப் பயிற்சியாளர் ஆறுமுகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: