கிராமங்களுக்கு பஸ் வசதி: அமைச்சர்.

*மதுரை கிழக்கு தொகுதியில் புதிதாக 15வழித்தடங்களில் அரசு பேருந்து வசதி:

ஞாயிற்றுக் கிழமை கொடியசைத்து துவக்கி வைக்கிறார் அமைச்சர் பி.மூர்த்தி:

மதுரை:

மதுரை கிழக்கு தொகுதிக்குட்பட்ட 15 கிராமங்களுக்கு, புதிதாக அரசு பேருந்து வசதி சேவையினை, ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆனையூரிலிருந்து கொடியசைத்து துவக்கி வைக்க உள்ளார் .

மதுரை கிழக்கு தொகுதிக்குட்பட்ட 15 கிராமங்களுக்கு அரசு பேருந்து வசதி வேண்டும் என்று பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மேற்கொண்ட நடவடிக்கையை தொடர்ந்து,
தொண்டமான் பட்டியிலிருந்து, பெரியார் பேருந்து நிலையத்திற்கும், கடவூரிலிருந்து அண்ணா பேருந்து நிலையத்திற்கும், சின்னப்பட்டி கிராமத்திலிருந்து பெரியார் பேருந்து நிலையத்துக்கும், சீகுபட்டி கிராமத்திலிருந்து பெரியார் பேருந்து நிலையத்திற்கும்,
வெளிச்சநத்தம் கிராமத்திலிருந்து செட்டிகுளம் வழியாக மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கும், பாரைப்பட்டி கிராமத்திலிருந்து பெரியார் பேருந்து நிலையத்திற்கும், கூளப்பன்பட்டி கிராமத்திலிருந்து பெரியார் பேருந்து நிலையத்திற்கும், மாரணி கிராமத்திலிருந்து பெரியார் பேருந்து நிலையத்திற்கும், கலைநகரிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கும், தபால்தந்தி நகரிலிருந்து மாட்டுதாவணி பேருந்து நிலையத்திற்கும், குலமங்கலம் கிராமத்திலிருந்து பெரியார் மற்றும் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திற்கும், செட்டிகுளம் கிராமம் வழியாக பெரியார் மற்றும் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து அழகர் கோவிலுக்கும், மிளகரனை கிராமத்திலிருந்து பெரியார் பேருந்து நிலையத்திற்கும் என 15 புதிய வழித்தடங்கள் உருவாக்கப்பட்டு அதற்கான ஆணையினையும் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, மேற்படி வழித்தடங்களில் பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி வருகிற 10-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு ஆனையூரிலிருந்து கொடியசைத்து துவக்கி வைக்கவுள்ளார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: