மதுரை அருகே, பெண்கள் விழிப்புணர்வு பேரணி மேயர் தொடங்கி வைத்தார்:

திருப்பரங்குன்றம் பகுதியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை, மேயர் இந்திராணி தொடங்கிவைத்தார்;

மதுரை:

தமிழ்நாடு இறையியல் கல்லூரி சார்பாக, பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த திருநகர் பகுதியில் நடைபெற்றது.
இதில், மதுரையின் முதல் பெண் மேயரான இந்திராணி பொன் வசந்த் கலந்து கொண்டு ,பச்சைக் கொடி அசைத்து இந்த பேரணியை துவக்கி வைத்தார்.
மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி மாணவர்கள், உய்பா கல்லூரி மாணவர்கள் மற்றும் முத்து தேவர் முக்குலத்தோர் பள்ளி மாணவர்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த பேரணியில், பெண் குழந்தைகளை பாதுகாப்பது மற்றும் பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை உறுதி செய்வது குறித்து விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் , இதில் பங்கேற்ற மாணவர்கள் கையில் பதாதைகளை ஏந்தியவாறு கோஷம் போட்டு பேரணி மேற்கொண்டனர். இந்தப் பேரணி திருப்பரங்குன்றம், திருநகர் முக்கிய சாலைகளில் நடைபெற்றது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: