கீழப்பட்டி சக்தி காளியம்மன் ஆலய கும்பாப ிஷேக விழா:

முதலைக்குளம் ஊராட்சி கீழப்பட்டி அருள்மிகு ஸ்ரீ சக்தி காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: முதல்நாள் யாகசாலையில் அமைச்சர் மூர்த்தி பங்கேற்பு :

சோழவந்தான்:

மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஒன்றியம், முதலைக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட கீழப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி பங்கேற்று யாகசாலை பூஜையை தொடங்கி வைத்தார். அமைச்சருக்கு, பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இன்று காலை விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை நிகழ்ச்சிகள் துவங்கின. காயத்திரி ஹோமம் மஹா பூர்ணாகுதி யுடன் யாகசாலை நிகழ்ச்சி முடிவுற்று கடம் புறப்பாடாகி காலை சுமார் 10 மணி அளவில் கும்பத்தின் மேல் புனிதநீர் தெளிக்கப்பட்டது. அப்போது, வானத்தில் கருடன் வட்டமிட்டது. தொடர்ந்து, அன்னதானம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை, கீழப்பட்டி முதலைக்குளம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
இதில் ,திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில், செல்லம்பட்டி திமுக ஒன்றிய செயலாளர் சுதாகரன் ,முதலைகுலம் ஊராட்சி மன்றத் தலைவர் பூங்கொடி பாண்டி ,துணைத் தலைவர் பத்ரகாளிசுரேஷ், ஒன்றியக்
கவுன்சிலர் அரவிந்தன், உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விக்கிரமங்கலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: