தமிழக அரசைக் கண்டித்து, அதிமுக ஆர்ப்பாட் டம்:

சொத்து வரியை ஏற்றி நிதியமைச்சர் மனிதாபிமானம் அற்ற வகையில் செயல்பட்டு வருகிறார் என, மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு பேச்சு:

மதுரை :

மதுரை பெத்தானியாபுரத்தில் மதுரை மாநகர் அதிமுக சார்பில் சொத்து வரி உயர்வை கண்டித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இப்போராட்டத்தில் பங்கேற்ற செல்லூர் கே.ராஜு பேசுகையில் "திமுக தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதி ஒன்றாகவும் செயல்படுத்துவது ஒன்றாகவும் உள்ளது, திமுகவின் 11 மாத கால ஆட்சியில் சென்னை முட்டும் அளவிற்கு விலைவாசி உயர்வு உயர்ந்துள்ளது, சொத்து வரியை ஏற்றி நிதியமைச்சர் மனிதாபிமானம் அற்ற வகையில் செயல்பட்டு வருகிறார், கார்ப்பரேட் கம்பெனியில் வேலை பார்த்தவருக்கு மக்களின் நிலை தெரியும்?, (நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்), அதிமுக மக்களுக்கான கட்சியாக செயலாற்றி வருகிறது, அதிமுக 10 ஆண்டு கால ஆட்சி காலத்தில் எண்ணற்ற மக்கள் நல திட்டங்கள் வழங்கப்பட்டது, அதிமுகவின் ஆட்சி ராமராஜிய ஆட்சியாக இருந்தது, இராமனுக்கு சீதை போல எம்.ஜீ.ஆருக்கு ஜானகி இருந்தார், அதிமுக தனித்துவமாக தனித்து ஆட்சியை நடத்தியது, 2018 ல் வரி உயர்வை எதிர்த்து மு.க.ஸ்டாலின் வானத்துக்கும், பூமிக்கும் தவ்வினார், 25 இலிருந்து 50 சதவிகித வரி உயர்வுக்கு சொத்து வரியா இல்லை சொத்தை அபகரிக்கும் வரியா என மு.க.ஸ்டாலின் பேசினார், சொத்து வரி உயர்வால் மக்களின் சொத்து மட்டுமல்லாமல் கட்டியிருக்கும் வேட்டியை கூட கொடுக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது, மக்கள் விரோத ஆட்சியாக திமுக ஆட்சி நடைபெறுகிறது, திமுக ஆட்சி வரும் போதெல்லாம் தமிழகம் சூடு காடாகி மக்கள் வறுமை பிடிக்கு செல்கிறார்கள், மக்கள் ஒற்றுமையாக செயல்பட்டு திமுகவின் மக்கள் விரோத ஆட்சியை அகற்ற வேண்டும்" என கூறினார்

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: