காவல் ஆய்வாளருக்கு பாராட்டு விழா:

சோழவந்தான் காவல் ஆய்வாளருக்கு வர்த்தக சங்கத்தின் சார்பாக பாராட்டு விழா:

ஊரெங்கும் வாழ்த்து சுவரொட்டிகள்:

மதுரை:

மதுரை, சோழவந்தான் பகுதியில் குற்றங்களை குறைக்க நகர் முழுவதும் 42 இடங்களில் சிசிடிவி கேமரா அமைத்து துரிதமாக நடவடிக்கை எடுத்து வரும் காவல் ஆய்வாளருக்கு வர்த்தக சங்கத்தின் சார்பாக பாராட்டு விழா நடத்தப்பட்டது .
மேலும் ,ஆய்வாளரை பாராட்டி நகர் முழுவதும்
போஸ்டர் ஒட்டி , பொதுமக்கள்
நன்றி தெரிவித்தனர்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் நகர் பகுதியின் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தி அவைகளை காவல் நிலையத்துடன் இணைத்து குற்ற சம்பவங்களை கண்காணித்து தடுக்கவேண்டும் என, சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள்,வர்த்தகர்கள் கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் வேண்டு
கோளுக்கிணங்க, காவல் ஆய்வாளர் சிவபாலன், முயற்சியில்
காவல் நிலையத்திற்கு உட்பட்ட பேருந்து நிலையம், கடைவீதி, ஜனகை மாரியம்மன் கோவில், உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் காவல் நிலையத்தின்
சார்பாக 42 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் அமைக்கபட்டது.
இதனைத் தொடர்ந்து , குற்றங்களை குறைக்க துரிதமாக நடவடிக்கை எடுத்து வரும் காவல் ஆய்வாளர் சிவபாலனுக்கு வர்த்தகர்களும், பொதுமக்களும் நகர்முழுவதும் போஸ்டர் ஒட்டி தங்களது பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்தனர்.
மேலும் ,இன்று பொதுமக்களும், வர்த்தக சங்கங்களை சேர்ந்த பலரும் காவல் ஆய்வாளருக்கு சால்வை அணிவித்து நன்றி பாராட்டி கௌரவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சோழவந்தான் பேரூராட்சித் தலைவர் ஜெயராமன், துணைத் தலைவர்
மற்றும் வார்டு கவுன்சிலர்கள் வர்த்தக சங்க தலைவர்
பிடிஆர் பாண்டியன், செயலாளர் மூலக்கடை ஜவகர், நகை கடை உரிமையாளர்கள் சங்க நிர்வாகி
முத்துக்குமரன், நகை மாளிகை ராஜா என்ற.இருளப்பன் , நகை அடகு கடை உரிமையாளர்கள் சங்கத்
தலைவர் மற்றும் செயலாளர் காளீஸ்வரன், பொருளாளர் ராஜா, மற்றும் வர்த்தக சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: