காரைக்குடி
காரைக்குடி ஸ்ரீராஜராஜன் சிபிஎஸ்இ பள்ளியில் ஆண்டு விழா,மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா பெற்றோர்தின விழா என முப்பெரும் விழா நடந்தது கல்விக்குழுமத்தின் ஆலோசகரும் அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் சுப்பையா தலைமை வகித்து துவக்கி வைத்தார் .பள்ளி தலைமையாசிரியை வாசுகி வரவேற்றார்
விழாவில் கல்விகுழுமத்தின் ஆலோசகர் டாக்டர் சுப்பையா பேசியபோது மாணவர்களின் திறமைக்கேற்ப அவர்களை டாக்டர்,கலெக்டர்,ராணுவ அதிகாரி, என அவர்களின் வருங்கால கனவுகளை நோக்கி வழிநடத்தி அவர்களுக்கு கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. என்றார்.
பெற்றோர் தின விழாவின் தலைமை விருந்தினராக கவிஞர்.தங்கமூர்த்தி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.விழாவில் தொழிலதிபர் படிக்காசு, இயக்குநர் சச்சிதானந்தம், டெபுடிகமாண்டன்ட் ராகேஷ்குமார் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.
அதனைத் தொடர்ந்து சிறப்புவிருந்தினராக விஜய்டி.வி.சூப்பர்சிங்கர் பிரியங்கா கலந்துகொண்டார்
பள்ளி விழாவில் ராஜ ராஜன் சி.பி.எஸ்.இ பள்ளியின் தலைமை ஆசிரியை வாசுகி வரவேற்க
சிறப்புவிருந்தினராக நடிகர் மற்றும் நகைச்சுவையாளர் மதன்பாபு கலந்துகொண்டு பேசினார்.