அக்கினிச்சட்டி ஏந்திய பக்தர்கள்:

விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோவில் பங்குனிப்பொங்கல் திருவிழா…
விடிய, விடிய அக்னிச்சட்டி செலுத்திய பக்தர்கள்…..

விருதுநகர் :

விருதுநகரில் பராசக்தி மாரியம்மன் கோவில் பங்குனிப்பொங்கல் திருவிழா கடந்த ஒரு வாரமாக சிறப்பாக நடைபெற்று வருகிறது. பொங்கல் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கயிறுகுத்து, அக்கினிச்சட்டி திருவிழா நேற்று அதிகாலை துவங்கி, நள்ளிரவு வரை உற்சாகமாக நடைபெற்றது. பெரும்பாலான பக்தர்கள் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி வேப்பிலை ஆடையணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏராளமான பக்தர்கள், தங்களது உடல்நலம் மற்றும் குழந்தைகள் உடல்நலம் வேண்டி உருவ பொம்மைகள் ஏந்தி வீதிகளில் வலம்வந்து, கோவிலில் காணிக்கை செலுத்தினர். சுமார் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் அக்கினிச்சட்டி எடுத்துவந்து கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று பராசக்தி மாரியம்மன் கோவில் பங்குனிப்பொங்கல் விழா தேரோட்டம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் சிறப்பாக செய்துள்ளனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: