மதுரையில் டாக்டர் வீட்டில் 50 சவரன் நகை கொள்ளை:
மதுரை:
மதுரையில், கோச்சடையில்
டாக்டர் வீட்டில் பூட்டை உடைத்து, மர்ம ஆசாமிகள்,வீட்டினுள் இருந்த 50 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
மதுரையைச் சேர்ந்த,
மருத்துவர் ரோஷினி மேனி, இவர் வீட்டை பூட்டி விட்டு, சென்னையில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அப்போது,
வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு ரோஷினி கடந்த மாதம் சென்ற நிலையில், கொள்ளையர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.
இது குறித்து எஸ்.எஸ்.காலனி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.