சிவகங்கையில் மக்கள் குறைதீர்க்கும் நாள்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்:

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் :
மாவட்ட ஆட்சித்தலைவர்
ப.மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது:

மதுரை:

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர்
ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் விலையில்லா தையல் இயந்திரங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 2 பயனானிகளுக்கு தலா ரூ.5,000, மதிப்பிலான ரூ.10,000, மதிப்பீட்டில் 2 இலவச தையல் இயந்திரங்களையும், 2 பயனானிகளுக்கு தலா ரூ.5,000, மதிப்பிலான ரூ.10,000
மதிப்பீட்டில் 2 இலவச சலவைப் பெட்டிகளையும், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணையினையும், தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புச்சாரா நலவாரியங்களின் கீழ் 5 பயனாளிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியத் தொகைக்கான ஆணையினையும் ஆக மொத்தம் 14 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை கோருதல், வங்கிக்கடன், மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் உபகரணங்கள் கேட்டல், குடும்ப அட்டை கோருதல் மற்றும் இதர மனுக்கள் போன்ற 472 கோரிக்கை மனுக்கள் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்டது.
மனுக்கள் மீது கவனம் செலுத்தி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்
ப.மதுசூதன் ரெட்டி, உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில்;, மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்
சீமைச்சாமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சு.தனலட்சுமி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ந.மங்களநாதன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் மு.காமாட்சி, மாவட்ட வழங்கல் அலுவலர் சி.இரத்தினவேல், தொழிலாளர் நலத்துறை அலுவலர் கோடீஸ்வரி, உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: