உசிலம்பட்டியில் மூக்கையா தேவர் நூற்றாண் டு விழா:

மதுரை அருகே உசிலம்பட்டியில் மூக்கையா தேவர் நூற்றாண்டு விழா:

உசிலம்பட்டியில், மூக்கையா தேவரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். மாலை அணிவித்து மரியாதை:

மதுரை

சுதந்திர போராட்ட தியாகிம், தென்மாவட்ட மக்களின் கல்வி வளர்ச்சிகாக பாடுபட்ட பி.கே.மூக்கையாதேவர்
திருவுருவ சிலையின், உசிலம்பட்டியில் ஓ.பி.எஸ். , சொந்த செலவில் வைக்கப்பட்டுள்ளது . அதனைத் தொடர்ந்து, மூக்கையாதேவரின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில், உசிலம்பட்டியில் , உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாடு செய்திருந்தார்.
கழக ஒருங்கிணைப்பாளரும் , முன்னாள் முதலமைச்சர் ஒ.பி.எஸ் . மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இந்த நிகழ்ச்சியில், முன்னாள் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் , முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் , முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லுார் கே.ராஜீ , மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் , வி.வி.ராஜன் செல்லப்பா , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்,கழக வழிகாட்டு குழு உறுப்பினர் ஆர் கோபாலகிருஷ்ணன்,தேனி மாவட்ட கழக செயலாளர் சையதுகான், சிவகங்கை மாவட்டக் கழகச் செயலாளர் செந்தில்நாதன், ராமநாதபுரம் மாவட்ட கழகசெயலாளர் முனியசாமி ,விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பி.அய்யப்பன் ,மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ் எஸ் சரவணன், கே தமிழரசன், பாண்டியம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: