கஞ்சா வைத்திருந்த முதியவர் கைது:

திருவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில், கஞ்சா வைத்திருந்த முதியவர் கைது…..

திருவில்லிபுத்தூர் :

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில், நகர் காவல்நிலைய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் நின்றுகொண்டிருந்த அய்யம்பட்டி தெரு பகுதியைச் சேர்ந்த சோலைராஜ் (58) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். முன்னுக்குப்பின் முரணாக பேசிய சோலைராஜை போலீசார் தீவிரமாக சோதனை செய்தனர். அவர் வைத்திருந்த பையில் 2 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், சோலைராஜை கைது செய்து அவரிடமிருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: