பல்கலை. நிர்வாக அலுவலர் சங்க ஆர்ப்பாட்டம ்:

மதுரை காமராஜர் பல்கலைக்கழக நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்:

மதுரை:

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தன்னாட்சி பெற்ற கல்வி
நிறுவனம்,
அதற்கு என்று தனி சட்டங்கள் தமிழக சட்டசபையில்
ஒப்புதல் அளிக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு பணிபுரியும்
அலுவலர்களுக்கு சட்ட விதிகளுக்கு உட்பட்டு நிதிக்குழு,
ஆட்சிக்குழு மற்றும் ஆட்சிப்பேரவை ஒப்புதலோடு ஊதியம்
வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 22.3.2022 அன்று நடைபெற்ற ஆட்சிக்குழு கூட்டத்தில்,
அனைத்து பல்கலை நிதி அலுவலர் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட
நடைமுறைகளை அமுல்படுத்த வேண்டும் என்றும், ஊழியர்களுக்கு
ஊதியம் மறு நிர்ணயம் செய்யவும், மேலும் ஊதியத்தில் பின்
தேதியிட்டு பிடித்தம் செய்வதற்கான தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது அறிந்து ,அலுவலர்கள் அனைவரும் மிகுந்த
அதிர்ச்சியும் மன உளைச்சலுக்கும் உள்ளாயினர்.
அலுவலர்களின் அனைத்து பதவி உயர்வும் சரி அவர்களுக்கு
வழங்கப்பட்ட ஊதியமும் சரி 1.1.1996 பல்கலை அனுமதிக்கப்பட்ட
பதவி மற்றும் ஊதிய அளவுகோலில் உள்ளபடியே
வழங்கப்பட்டு
வருகிறது.
ஆனால், உள்ளாட்சி தணிக்கை துறை தடைகளை ஏற்படுத்தி
அரசிடம் இருந்து பெறும் நிதியை குறைத்து பல்கலையின்
மாண்பிற்கும், செயல்பாட்டிற்கும், முன்னேற்றத்திற்கும்
தடைக்கல்லாக உள்ளது..
7வது
ஊதியகுழுவின் பரிந்துரையை
அமுல்படுத்தும்
சூழ்நிலையில் 02.02.2018 அன்று நடந்த
மதுரை காமராசர்
பல்கலைக்கழகத்தின் நிதிக்குழுவில் அன்று பதவியில் இருந்த
நிதிசெயலரும், உயர்கல்வித்துறை செயலரும் தமிழக அரசின் கடித
எண் 174 மற்றும் தணிக்கை தடைகள் அனைத்தையும் பரிசீலித்து
பணியில்
அலுவலர்கள் அனைவருக்கும் பல்கலையில்
அனுமதிக்கப்பட்ட ஊதிய அளவுகோலில் 7வது ஊதிய குழுவின்
பரிந்துரையை அமுல்படுத்துவது என்றும் ,மேலும் இந்த தேதிக்கு பிறகு
பணி நியமனம் ஆகும் ஊழியர்களுக்கு தமிழக அரசின் ஊதிய
விகிதத்தை அமுல்படுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இந்த தீர்மானம் 13.03.2018 அன்று நடைபெற்ற ஆட்சிக்குழு கூட்டத்தில்
தீர்மானம் நிறைவேற்ற பட்டு அமுல்படுத்தப்பட்டது.
இந்த சூழ்நிலையில் 04.03.2022 நிதி
நிதி அலுவலர் கூட்டத்தில்
எடுக்கப்பட்ட
நடைமுறைகளை செயல்படுத்துவது என்பது
கொள்கை முடிவாகாது
மேலும், ஊதிய மறுநிர்ணயம் மற்றும் ஊதிய பிடித்தம் என்பது 2.2.2018
மற்றும் 13.3.2018 நிதிக்குழு மற்றும் ஆட்சிக்குழு தீர்மானத்திற்கு
முரணானது.
ஆகவே மேலே கூறிய உண்மைத்தன்மை அடிப்படையில் இந்த
ஆட்சிப்
பேரவை, 22.03.2022 அன்று நடைபெற்ற ஆட்சிக்குழு
கூட்டத்தில் ஊழியர்களின் ஊதிய மறு நிர்ணயம் மற்றும் ஊதிய
பிடித்தம் தொடர்பான ஆட்சிக்குழு தீர்மானத்தை மறு பரிசீலனை
செய்து, ஏற்கனவே நடைமுறையில் உள்ள 2.2.2018 மற்றும் 13.3.2018
நிதிக்குழு மற்றும் ஆட்சிக்குழு தீர்மானத்தின்படி ஊதியவிகிதங்களை
தொடர்ந்து வழங்கிடவேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: