விருதுநகர் மாவட்டத்தில் வட்டாட்சியர் மற ்றும் கிராம நிர்வாக அலுவலர் பணி இடைநீக்கம்: ஆட்சியர்.

வெம்பக்கோட்டை தாசில்தார், துலுக்கப்பட்டி வி.ஏ.ஓ. பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை…..

விருதுநகர் :

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள வெம்பக்கோட்டை தாசில்தார் மற்றும் துலுக்கப்பட்டி வி.ஏ.ஓ இருவரையும் பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாசில்தாராக பணியாற்றி வந்தவர் சுந்தரமூர்த்தி. இவர் கடந்த ஆண்டு விருதுநகரில் தலைமையிடத்து தாசில்தாராக பணியில் இருந்தபோது,
ஆர்.ஆர்.நகர் பகுதியில் அமைந்துள்ள துலுக்கப்பட்டி சிப்காட் அரசு நிலத்தை, தனியாருக்கு தவறாக பட்டா மாறுதல் செய்து வழங்கியதாக புகார் எழுந்தது. தாசில்தார் சுந்தரமூர்த்தி, துலுக்கப்பட்டி வி.ஏ.ஓ. மலைப்பாண்டி இருவர் மீதும் துறைரீதியான விசாரணை நடைபெற்றது. அரசு நிலத்தை, தனியாருக்கு பட்டா மாறுதல் செய்து வழங்கிய தாசில்தார் சுந்தரமூர்த்தி, வி.ஏ.ஓ. மலைப்பாண்டி இருவரையும் பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: