தொடர் மருத்துவ சிகிச்சை அவசியம் மீனாட்ச ி மிஷன் ஹாஸ்பிடல் மருத்துவர் வலியுறுத்தல்:

டவுன் சிண்ட்ரோம் பாதிப்புள்ள குழந்தைகள் முழு திறனை எட்ட ஆரம்ப நிலையிலேயே நோயை கண்டறிந்து தொடர் மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது மிக அவசியம் : மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தல்.

மதுரை.
மார்ச்.25.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21ஆம் தேதி அன்று அனுசரிக்கப்படும்
உலக டவுண் சிண்ட்ரோம் தினத்தையொட்டி டவுண் சிண்ட்ரோம் பாதிப்புள்ள குழந்தைகளுக்கு
இலவச உடல் பரிசோதனையை மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை நடத்தி வருகிறது.

மேலும், மீனாட்சி மருத்துவமனை சார்பில் பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் மருத்துவ நிபுணர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் முன்னிலையில்
டவுன் சிண்ட்ரோம் பாதிப்பில்லாத குழந்தைகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று சண்டமேளம் போன்ற இசைக்கருவிகளை இசைத்து நடனமாடி யோகா பயிற்சிகளை செய்து காட்டி அவர்களது படைப்பாக்கத் திறனை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தினர்.

டவுன் சிண்ட்ரோம் பெடரேஷன் ஆஃப் இந்திய தலைவர் டாக்டர் சுரேகா ராமச்சந்திரன் மற்றும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மரம் மரபணுவியல் நிபுணர் டாக்டர் பிரதீப் குமார்,மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மருத்துவ இயக்குனர் டாக்டர் ரமேஷ் அர்த்தநாரி,
மருத்துவமனை நிர்வாக அதிகாரி டாக்டர் கண்ணன், குழந்தைகளுக்கான முழுமையான பராமரிப்பு மையத்தின் மருத்துவ நிபுணர் டாக்டர் உமா முரளிதரன்
ஆகியோர் இது குறித்து விளக்கமளித்து உரையாற்றும் போது,
டவுண் சிண்ட்ரோம் பாதிப்புள்ள குழந்தைகளுக்கு மருத்துவமனையில் இருக்கும் குழந்தைகளுக்கான முறையான பராமரிப்பு மையம் பல்வேறு துறைகளில் ஒருங்கிணைந்த சிகிச்சை கிடைப்பதை ஏதுவாக வகையில் உள்ளது. குழந்தைகள் நல மருத்துவர்கள், மனநல மருத்துவர்கள், சிகிச்சை வழங்குபவர்கள் , சமூகப் பணியாளர்கள் ஆகியோரை உள்ளடக்கிய குழுவில் மூளை நரம்பியல், எலும்பியல் மற்றும் கண்
மருத்துவயியல், கண்.
காது மூக்கு தொண்டை மருத்துவ துறை ஆகியவற்றிலும் இந்த அமைப்பின் கீழ் செயல்படுவதாக மையம் செயல்படுவதாக மீனாட்சி மருத்துவமனை ஆராய்ச்சி மையத்தில் உள்ள மருத்துவ நிபுணர்கள் அழுத்தம் திருத்தமாக கூறினர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: