தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் இடங்களில் நினை வஞ்சலி:

.

வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில், பாஜகவை எதிர்க்க எதிர்கட்சிகள் திரளான வேண்டும்: பாலகிருஷ்ணன்.

மதுரை:

இந்திய சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் நினைவு தினத்தையொட்டி, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ,மதுரை திருப்பரங்குன்
றத்தையடுத்த ஹார்விபட்டி பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில், இந்திய மார்க்சிஸ்ட் கட்சி மாநில ச்
செயலாளர் பாலகிருஷ்ணன் கொடியேற்றி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வதுமாநாட்டுக்கான பிரச்சாரத்தை துவக்கினார். செய்தியாளர்களை சந்தித்த பாலகிருஷ்ணன் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் 5000 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மறைந்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கான நினைவஞ்சலி கூட்டம், மற்றும் 23வது மாநாட்டுக்கான பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, இந்த மாநாடு இந்தியா முழுவதும் இடதுசாரிகளின் முன்னெடுப்பதற்கான திட்டமிடலாக அமையும். உக்ரைனில் கச்சா எண்ணெயின் இறக்குமதி விலை குறைக்கப்பட்டுள்ளன நேரத்தில் இந்தியாவில் எதற்காக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த வேண்டும். ஏழை ,எளிய மக்கள், சிறு குறு தொழில் முனைவர்கள், வியாபாரிகள், விவசாயிகளைப் பற்றி கவலை மத்திய அரசிற்கு இல்லை.
அவர்கள் கவலை எல்லாம் அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மட்டுமே கவலைப்படும் கார்ப்பரேட் கட்சியாக உள்ளது.
தமிழகத்தில், ஆணவக் கொலைகள், தாழ்த்தப்பட்ட பட்டியலின மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் அதிகத்துள்ளது.

மதுரையில் நடைபெறும் 23-வது மாநாடு தமிழ் பண்பாடு .மற்றும் பெருமையை பறைசாற்றும் விதமாக அமையும்’
தாய்மொழியை நீதிமன்ற மொழியாக மாற்றுவது போன்ற நடவடிக்கைகளை திட்டமிடும் மாநாடாக இந்த மாநாடு அமையும்.
நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில் பாஜகவின் வெற்றி குறித்த கேள்விக்கு:
கடந்த கால வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி பெற்றவர்கள் அடுத்த தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளதாக சொல்கிறார்கள். பொருளாதார இழப்பை மறைத்து இந்துக்கள் என்கிற வெறியை உண்டாக்கி பாஜக வெற்றி பெறலாம் என்று நினைக்கிறார்கள்.
இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிவது விவகாரம் குறித்த கேள்விக்கு:
கர்நாடக அரசாங்கம் ஒரு தேவையற்ற ஆணையைப் பிறப்பித்துள்ளது. யாருக்கு எந்த மதம் பிடித்துள்ளதோ அந்த மதத்துக்கான அடையாளத்தை பின்பற்றலாம் என்கிறது இந்திய அரசியல் சட்டம். இந்துக்கள் திருநீறு, குங்குமம் வைத்துக் கொள்வதைப் போல சீக்கியர்கள் டர்பன் அணிகிறார்கள் இதுபோன்ற விஷயங்களில் அரசாங்கம் தலையிட கூடாது. இந்துக்கள் திருநீர் அணிய கூடாது என்று அறிவித்தால் ஏற்றுக்கொள்வோமா, அதுபோல இஸ்லாமிய பெண்கள் அவர்கள் பழக்கத்தின் அடிப்படையில் முகத்தை மறைக்கும் துணியை வைத்துள்ளார்கள் ஆனால் ,இவ்வளவு காலம் இல்லாமல் திடீரென்று இதனால் என்ன பாதிப்பு வந்து விட்டது? இது போன்ற பிரச்சினைகளை உருவாக்கி அப்பாவி மக்களை சண்டையிட வைத்து ரத்த ஆறு ஓட வைத்து பாஜக அரசியல் ஆதாயம் தேட முயல்கிறது. இது கண்டனத்திற்குரியது.
வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க் கட்சிகளுக்குள் வலுவான கூட்டணி அமையுமா என்ற கேள்விக்கு:
கடந்தகால தேர்தலின் அடிப்படையில் நாடாளுமன்ற தேர்தலில் கூட தனித்துப் போட்டியிட்டு பிறகு கூட்டணி வைத்துள்ளதை நம்மால் காண முடியும் .
ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது. அனேகமாக வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் மதவாத சக்திக்கு எதிராக வாக்குகள் சிதறாமல் இருப்பதற்காக எதிர்க் கட்சிகள் ஒரே மேடையில் சந்திப்பதற்கான சூழ்நிலை நிச்சயம் உருவாகும் என்று நினைக்கிறேன் என பாலகிருஷ்ணன் கூறினார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: