குடிநீர் வசதி: தலைவர் தொடங்கி வைத்தார்:

காரியாபட்டி
அமலா பள்ளியில் சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வசதி பேரூராட்சி தலைவர் செந்தில் தொடங்கி வைத்தார்:

காரியாபட்டி

காரியாபட்டி அமலா பள்ளியில், சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வசதி தொடங்கி வைக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேரூராட்சி 12வது வார்டு கவுன்சிலர் சத்தியபாமா தாமோதரக் கண்ணன் முயற்சியால், அமலா தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டது.
காரியா பட்டி
பேரூராட்சித் தலைவர் செந்தில் ,சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். மாணவர்களுக் காக அமைக்கப்பட்ட சின்டெக்ஸ் தொட்டிகளை சேர்மன் செந்தில் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், பள்ளி நிர்வாகி எலிசபெத் ராணி. தலைமை ஆசிரியர் விக்டோரியா, பேரூராட்சி துணைத் தலைவர் ரூபி சந்தோசம் கவுன்சிலர்கள் சங்கரேஸ்வரன், சரஸ்வதி நாராயணன், உட்பட பலர் கலந்துகொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: