தனியார் ஆஸ்பத்திரிக்கு நோட்டீஸ்.

மதுரை மாநகராட்சி
வரி செலுத்தாத தனியார் மருத்துவமனைக்கு ஜப்தி நோட்டீஸ்:

மதுரை:

மதுரை மாநகராட்சி பகுதிகளில் 2021-2022 ஆம் ஆண்டிற்கான சொத்து வரி, பாதாள சாக்கடை வரி, மற்றும் கடை வாடகை வசூல் செய்யும் பணி தீவிரமாக மேற்கொள்ளப் பட்டு வருகிறது. மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வாடகை வசூல் செய்வதற்காக குழு அமைக்கப்பட்டு வீடுகள், வணிக நிறுவனங்களிடம் வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில், மதுரை மாநகராட்;சி மண்டலம் எண்.1 வார்டு எண்.17 எல்லீஸ் நகரில் பகுதியில் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையில் நீண்டநாட்களாக மாநகராட்சிக்கு வரி செலுத்தாமல் இருந்தது. இது குறித்து வருவாய் குழுவின் மூலம் ஏற்கனவே, எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ரூ.16 லட்சம் வரை வரிபாக்கி வைத்திருந்த காரணத்தால் தனியார் மருத்துவமனைக்கு நீதிமன்ற உத்தரவின்படி உதவி ஆணையாளர் த
ரமேஷ் , தலைமையில் வருவாய் பிரிவின் மூலம் வாரண்ட் ஜப்தி நோட்டீஸ் இன்று (23.03.2022) ஒட்டப்பட்டது.
இந்த ஆய்வின் போது, உதவி ஆணையாளர்
ரமேஷ், நிர்வாக அலுவலர்
ரெங்கராஜன், சிறப்பு வருவாய் ஆய்வாளர்
ஜமாலுதீன், உதவி வருவாய் அலுவலர்
சித்ரா, கண்காணிப்பாளர்
செந்தில்குமரன் உட்பட வருவாய் உதவியாளர்கள் ஈடுபட்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: