யானைக்கு குளியல் தொட்டி:

மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் யானை பார்வதிக்கு ரூ.23.50 லட்சம் செலவில் குளியல் தொட்டி:

மதுரை:

*மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் யானை பார்வதி கண்ணில் புரை ஏற்பட்டு கால்நடை மருத்துவ நிபுணர்கள் குழு மூலம் தொடர் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
யானையின் மன அழுத்தத்தை போக்கும் விதமாக ,குளித்து விளையாடும் வகையில் மருத்துவ குழு குளியல் தொட்டி அமைக்க அறநிலையத்துறைக்கு பரிந்துரைத்திருந்தது
இதற்காக ,ரூ.23.50லட்ச மதிப்பில் யானை பராமரிக்கப்பட்டு வரும் யானை மகால் பகுதியிலேயே, குளியல் தொட்டி அமைப்பது என முடிவெடுக்கப்பட்டது.
*நூற்றாண்டு பழமையான கோயில் என்பதால் ,தொல்லியல் துறை அனுமதியுடன் – கோவிலுக்குள் குளியல் தொட்டி அமைப்பதற்கு கட்டுமான பணி துவங்கப்பட்டுள்ளது.
இரண்டு மாத காலத்துக்குள் கட்டுமான பணியை முடிக்க ஒப்பந்த நிறுவனத்திற்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் உத்தரவு இட்டுள்ளது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: