நனைந்த நெல் மூட்டைகளை பாதுகாக்க கோரிக்க ை:

நனைந்த நெல் மூட்டைகளை பாதுகாக்க கோரிக்கை:

காரியாபட்டி:

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே ஒடுக்கம் குளத்தில் மழையால் சேதம் அடைந்து, தேங்கிக் கிடக்கும் நெல் மூடைகளை அப்புறப்படுத்தி பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்போது சமூக ஆர்வலர் கேட்டுக்
கொண்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சிவகாசி, விருதுநகர் , காரியாபட்டி ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. விவசாயிகளிடம், கொள் முதல் செய்யப்பட்ட நெல் மூடைகளை ,தமிழ்நாடு உணவு பொருள் வாணிப கழகம் திறந்தவெளியில் வைத்திருப்பதால், மழையில் நனைந்து நெல் மூடைகள் பாதிக்கும் வண்ணம் உள்ளது .
இதை உடனடியாக அப்புறப்படுத்தி, பாதுகாப்பான இடத்தில் வைக்க
இப்பகுதி சமூக ஆர்வலர்கள் கேட்டுக்
கொண்டுள்ளனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்களும் கேட்டுக்
கொண்டுள்ளனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: