திருக்கல்யாணத்திற்கு வழி அனுப்பி வைத்த திருப்பரங்குன்றம் முருகன்:

திருக்கல்யாணத்திற்கு வந்த மதுரை மீனாட்சி சொக்கநாதரிடம் ஆசி பெற்று வழியனுப்பி வைத்த திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி – தெய்வானை:

மதுரை:

மதுரை திருப்பரங்குன்றம், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி பெருவிழா முக்கிய நிகழ்வாக சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. பிரியாவிடையுடன் சொக்கநாதரும், மீனாட்சி அம்மனும் எழுந்தருளினர். மணக்கோலத்தில் முருகப்பெருமான் தெய்வானை அம்மனுடன் எழுந்தருளினர்.
அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க முருகன் தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, திருக்கல்யாணத்தை முடித்துவிட்டு, திருக்கோயிலில் இருந்து மதுரைக்கு புறப்பட்ட மீனாட்சி-சொக்கநாதரை 16 -கால் மண்டபம் அருகே சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை வெள்ளி யானை வாகனத்தில் வந்து மூன்று முறை சுற்றி வந்து ஆசி பெற்று வழியனுப்பி வைத்தனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் மீனாட்சி-சுந்தரேஸ்வரர் மற்றும் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானையை வழிபட்டனர். இந்தப் பங்குனி பெருவிழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் லட்சக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்திலுக்க திருக்கோயில் முன்பாக துவங்கியது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: