உலக தண்ணீர் தினம்:

உலக தண்ணீர் தினம் ஆட்சியர் தொடங்கி வைத்தார்:

சிவகங்கை:

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு
மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி,
தண்ணீரின் தரம் பரிசோதிக்கும் முகாமினை ,தொடங்கி வைத்து,
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களை வழங்கினார்.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை, நகராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர்
ப.மதுசூதன் ரெட்டி, தண்ணீரின் தரம் பரிசோதிக்கும் முகாமினை தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களை வழங்கி தெரிவித்ததாவது:

தண்ணீர் மேலாண்மை தமிழகத்தின் முன்னுரிமை, நீர் ஆதாரங்களை காப்போம், நிலத்தடி நீரினைக் காப்போம் என்ற அடிப்படையில், தமிழ்நாடு முதலமைச்சர் , தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நீர் ஆதாரங்களை மேம்படுத்திடும் பொருட்டு, பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறார்கள்.
நீரின்றி அமையாத உலகு என்ற நோக்கில், தண்ணீர் இல்லாமல் எந்த ஒரு உயிரினமும் வாழ இயலாது. தண்ணீர் என்பது நம் வாழ்க்கையின் ஓர் முக்கிய அங்கமாகும்.
2022-ஆம் ஆண்டின் கருப்பொருளாக “நிலத்தடி நீர் – கண்ணுக்கு தெரியாததை காணக்கூடியதாக ஆக்குதல்” என்ற நோக்கில் நிலத்தடி நீர் என்பது பூமிக்கடியில் அமைந்துள்ள பாறைகளில் காணப்படும் துவாரங்கள், விரிசல்கள் மற்றும் மணல் துகள்களுக்கு இடைப்பட்ட காலியிடங்களில் கிடைக்கிறது.
இவ்வாறு பூமிக்கடியில உள்ள இத்தகைய நிலத்தடி நீர் நிரம்பியுள்ள படிவங்கள் நிலத்தடி நீர்த்தாங்கிகள் எனப்படும். நிலத்தடி நீர்த்தாங்கிகளிலிருந்து எடுக்கப்படும் தண்ணீர் ஒவ்வொரு ஆண்டும் பெய்யும் பருவமழையின் மூலம் ஈடுகட்டப்படுகிறது.
நிலத்தடி நீர் கண்ணுக்குத் தெரியாது. ஆனால், அதன் தாக்கம் எல்லா இடங்களிலும் தெரியும். கண்ணுக்குத் தெரியாமல் உள்ள நிலத்தடி நீர் நம் வாழ்க்கையை வளமாக்கின்ற பொக்கிஷமாகும். இத்தகைய நீர் ஆதார நிலப்பரப்பினை மாசுப்படாமல் பாதுகாக்கின்ற பொறுப்பு நம் ஒவ்வொரு இடத்திலும் இருக்க வேண்டும். மேலும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புக்களையும் உருவாக்கி அதனை முறையாக பராமரித்து, பருவமழையின் மூலம் முழுப்பயன் பெற வேண்டும்.

இது குறித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு, உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, இன்றையதினம் தண்ணீரின் தரம் பரிசோதிக்கும் முகாம் மேற்கொள்ளப்பட்டு, அதனைத்
தொடர்ந்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர்
ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது, சிவகங்கை நகர்மன்றத் தலைவர் துரை ஆன்ந்த், துணைத் தலைவர் கார்கண்ணன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சிவகங்கை – இராமநாதபுரம் வட்டம் மற்றும் திட்ட பராமரிப்பு வட்ட மேற்பார்வைப் பொறியாளர் கோ.குணசேகர், நகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியன், துணை மேற்பார்வை பொறியாளர் இராஜசேகர், சிவகங்கை திட்டக்கோட்ட நிர்வாகப்பொறியாளர் சே.இரவிச்சந்திரன், நில நீர் ஆய்வாளர்
ரவிச்சந்திரன், உதவி நிர்வாகப் பொறியாளர்
க.தமிழ்ச்செல்வன், மற்றும் சிவகங்கை நகர்மன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: