திருத்தங்களின் வளர்ச்சிப் பணிகள் மேயர் ஆ ய்வு:

திருத்தங்கல் வளர்ச்சித் திட்டப் பணிகளை, மேயர் சங்கீதா இன்பம் ஆய்வு செய்தார்…..

சிவகாசி :

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் மண்டலத்தில், தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய சாலைகள் அமைக்கும் பணியினை, சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருத்தங்கல் மண்டலத்தில், மேல ரதவீதி தேவர் சிலை சாலை மற்றும் வடக்கு ரத வீதி பகுதியில், 30 லட்சம் ரூபாய் திட்டமதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை, சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் இன்று காலை, அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார். ஆய்வின்போது, துணை மேயர் விக்னேஷ்பிரியா, மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, பொறியாளர் ரமேஷ், திருத்தங்கல் திமுக நகர பொருளாளர் உதயசூரியன், சிவகாசி நகர பொறுப்பாளர் காளிராஜன், திருத்தங்கல் முன்னாள் நகர்மன்றத் துணைத் தலைவர் பொன்சக்திவேல், மாமன்ற உறுப்பினர்கள் செல்வம், சேதுராமன், ஸ்ரீநிகா, குருசாமி, சீனிவாசப்பெருமாள், வார்டு பொறுப்பாளர் ராஜேஷ், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ரவிசெல்வம் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: