சேலத்தில் புதிய கிளை: தனிஷ்க்.

தனிஷ்க் சேலத்தில் புதிய கிளை:

மதுரை;

மதுரை :

டாடா குழுமத்தைச் சேர்ந்த மிகப் பெரிய சில்லரை ஜுவல்லரி பிராண்டான தனிஷ் க் தென் னிந்தியாவில் சில்லரை விற்பனை செயல்பாடுகளை விரிவாக்கம் செய்யும் நோக்குடன் சேலத்தில் புதிய கிளை உட்பட தமிழகத்தில் புதிதாக 3 விற்பனையகங்ளை தொடங்குகிறது.
மதுரை, சேலம் மற்றும் நாகர்கோயிலுள்ள விற்பனை நிலையங்கள் புதிதாக மறு நிர்மாணம் செய்யப்பட்ட அதேவேளையில் தனிஷ்க்கின் சில்லரை விற்பனை செயல்பாடுகளில் கூடுதல் பலம் சேர்க்கும் வகையில், தற்போது சேலத்தில் புதிதாக ஒரு கிளை திறக்கப்பட்டுள்ளது. மதுரை கீழ வெளி வீதி மற்றும் அண்ணா நகரில் மிகப்பெரிய அளவில் புதுப்பிக்கப்பட்ட கடைகளை டைட்டன் கம்பெனி லிட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வெங்கட்ராமன் தொடங்கி வைத்தார். டைட்டன் கம்பெனி லிட் நிறுவனத்தின் தனிஷ் க்
சந்தை பிரிவு பொது மேலாளர் ரஞ்சனி கிருஷ்ணசுவாமி தெற்கு மண்டல வர்த்தக தலைவர் சரத் பாரம்பரியத்தை ஏந்துபவர்களும் இன்றைய மாற்றத்தை உருவாக்குபவர்க ளுமான தமிழ் மொழியின் புதுமை பெண்கள் முன்னிலையில் திறப்பு விழா நடைபெற்றது. தொடக்க விழாவின் ஒரு பகுதியாக நகை வாங்கும் ஒவ்வொருவருக்கும் தங்க காசுகள் இலவசமாக அளிக்கப்படும்.
இந்த சலுகை கீழ வெளி வீதி மற்றும் அண்ணாநகர் கடைகளில் மார்ச் 17-ஆம் தேதி தொடங்கி மார்ச் 19 வரையிலும், நாகர்கோயிலில் மார்ச் 18ஆம் தேதி முதல் மார்ச் 20ஆம் தேதி வரை மட்டுமே கிடைக்கும். மேலும், தனிஷ் க் தனது வாடிக்கையாளர்களுக்கு தங்கத்துக்கு பணம் வாய்ப்பையும் வழங்குகிறது.
இதில், வாடிக்கையாளர்கள் எந்த நகைக் கடைகளிலும் வாங்கி வரும் தங்கத்தை கொண்டு வந்து 8% கழிவுடன்பணமாக பெறலாம்.
தங்கத்தின் இறுதி மதிப்பு உருக்கிய பின் மதிப்பிடப்படும் விதிமுறைகளுக்கு உட்பட்டது என தெரிவித்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: