ஆளுநர் சுவாமி தரிசனம்:

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தரிசனம்:

மதுரை:

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், மதுரைக்கு வந்தார். அதன்பிறகு, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து, தமிழிசை சௌந்தர்ராஜன், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தந்தார். அப்போது ,தமிழிசைக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை தரப்பட்டது. தொடர்ந்து ,கோவில் யானை ஆசீர்வாதம் வழங்கியது.
அதன்பிறகு, தமிழிசை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் சென்று அம்மன் சன்னதியிலும், சுந்தரேஸ்வரர் சந்நிதியிலும் சாமி தரிசனம் செய்தார். சுமார் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 45 நிமிட நேரம் தரிசனம் செய்த தமிழிசை, அம்மன் சந்நிதி வழியாக கோவிலில் இருந்து வெளியே வந்து விமான நிலையத்துக்கு புறப்பட்டு சென்றார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: