ஆலய குடமுழுக்கு:

சோழவந்தான் அருகே தாராப்பட்டி கிராமம் அருள்மிகு ஸ்ரீ கல்லாயுத மூர்த்தி ஸ்ரீ தொட்டிச்சி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

சோழவந்தான் மார்ச் 16

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தாராப்பட்டி கிராமம் அருள்மிகு ஸ்ரீ கல்லாயுத மூர்த்தி அய்யனார் ,ஸ்ரீ தொட்டிச்சி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை கணபதி பூஜையுடன் நிகழ்வுகள் தொடங்கின. இன்று காலை யாகசாலை பூஜை, மகா பூர்ணாஹூதி நடைபெற்று காலை சுமார் 10 மணி அளவில் ஸ்ரீ கல்லாயுத மூர்த்தி தொட்டிச்சி அம்மன் விமானத்தில் புனித நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து விநாயகர், முருகன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து பால், தயிர், வெண்ணெய், நெய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. அன்னதானம் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தாராப்பட்டி கிராமம் ஸ்ரீ கல்லாயுத மூர்த்தி அய்யனார் தொட்டிச்சி அம்மன் கோவில் பங்காளிகள் செய்திருந்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: