அம்மா உணவகத்தில், ஜெ படம் அகற்றம்:

அம்மா உணவகத்தில் அம்மா படம் அகற்றம் முதலமைச்சர் உத்தரவை காலில் போட்டு மிதிப்பதா

முன்னாள் அமைச்சர் உதயகுமார் கடும் கண்டனம்

மதுரை

முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் மாவட்ட ஆட்சித தலைவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது

பாரதரத்னா புரட்சித்தலைவர் அவர்கள் சத்துணவு திட்டம் தந்தார்கள் , மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழகத்தில் பசிப்பிணி இருக்கக்கூடாது என்று மாதம்தோறும் 20 கிலோ விலையில்லா அரிசி வழங்கினார்கள் , அதனை தொடர்ந்து ஏழை எளியோருக்கு மலிவான விலையில் உணவினை வழங்கும் வகையில் கடந்த 19.02.2013 அன்று அம்மா உணவகத்தை சென்னையில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தொடங்கி வைத்தார் .

அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் 700 அம்மா உணவகம் தொடங்கப்பட்டது இதன் மூலம் நாள்தோறும் 12 லட்சத்திற்கு மேற்பட்டோர் பசியாறி பயனடைந்தனர் குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு இந்த திட்டம் பெரிதும் பயனுள்ளதாக இருந்தது . தற்போது அம்மா உணவக திட்டத்தினை ஆந்திர , கர்நாடகா , ஒரிசா , உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன .

மதுரையில் தற்போது 12 அம்மா உணவகம் உள்ளது . மதுரையில் அம்மா உணவகத்தில் கடந்த பல ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்த அம்மா அவர்களின் திருவுருவ படத்தை அகற்றிவிட்டு தற்போது வைக்கப்பட்டுள்ள அம்மா உணவக பலகையில் மாண்புமிகு அம்மா அவர்களின் படம் இடம் பெறாதது தமிழ்நாட்டு மக்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது .

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும் அதில் எந்த மாற்றம் இல்லை என்று அறிவித்திருக்கின்றார்கள் . ஆனால் மாண்புமிகு முதலமைச்சரின் அறிவிப்பிற்கு எதிராக இங்கே மதுரை மாநகராட்சியில் அம்மா உணவகத்தில் மாண்புமிகு அம்மா அவர்களின் திருவுருவபடத்தை அகற்றி மாற்றம் செய்திருப்பது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்திரவிற்கு மதிப்பு கொடுக்காமல் அவர் உத்தரவினை காலில் போட்டு மிதிப்பது போல அமைந்துள்ள மதுரை மாநகராட்சியின் செயல் மிகுந்த மனவேதனையை மதுரை மக்களிடத்தில் ஏற்படுத்தியிருப்பதோடு மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது .

மேலும் சொல்வது ஒன்று செய்வது ஒன்றா என்று இந்த செயவை பார்த்து மதுரை மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றார்கள் . மேலும் மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் , கழக ஒருங்கிணைப்பாளர் , பாசமிகு அண்ணன் ஒ.பி.எஸ் . அவர்களின் ஆணைக்கிணங்க , சாமானிய முதலமைச்சராக சரித்திரம் படைத்திட்ட மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் . பாசமிகு அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம் . என்று கூறியுள்ளார்

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: