14 March, 2022 15:08

சதுரகிரிமலைக்கு செல்ல, பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி…..

திருவில்லிபுத்தூர் :

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது, பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில். பங்குனி மாத பௌர்ணமி பூஜைகளுக்காக 4 நாட்கள் கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு, மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. நாளை, 15ம் தேதி (செவ்வாய் கிழமை) பங்குனி மாத வளர்பிறை பிரதோஷம் நாளிலும், 17ம் தேதி (வியாழன் கிழமை) பங்குனி மாத பௌர்ணமி நாளிலும், மறுநாள் வெள்ளி கிழமை பங்குனி உத்திரம் நாள் என மொத்தம் 4 நாட்கள், மலைக் கோவிலுக்கு சென்று சுந்தரமகாலிங்கம் சுவாமியை தரிசிக்க வனத்துறை, காவல்துறை, கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் கோடைக் காலமாக இருப்பதால், மலையேறும் பக்தர்கள் வசதிக்காக கோவில் செல்லும் வழியில் குடிநீர் வழங்குவதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. பங்குனி உத்திரம் நாளில் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால், மாவட்ட நிர்வாகம் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: