புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஆ திகைலாசநாதர் கோயிலில் இசை நாட்டிய சமர்ப்பண விழா நடந்தது

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஆதிகைலாசநாதர் கோயிலில் இசை நாட்டிய சமர்ப்பண விழா நடந்தது

திருப்பெருந்துறை இசை நாட்டிய சமர்ப்பணம் 2022 என்ற தலைப்பில்
வடநகர் ஆதிகைலாசநாதர்கோயில் கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு சென்னை ஸம்விருதா கலைக்கழகத்தின் சார்பில் நாட்டிய சமர்ப்பண விழா நடந்தது விழாவிற்கு திருவாவடுதுறை குருமகாசன்னிதானத்தின் அருளாணைப்படி கட்டளை தம்பிரான் தலைமை வகித்தார்.
ஸ்ரீ சாய் நிருத்திய நடனாலயா வசந்தகுமாரிராசேந்திரன் மாணவிகள் சிவஹரிணி,யூவஸ்ரீ,அட்சயா,சர்ஜனா,மயூரி ஆகியோரின் நடனமும் திருச்சிராப்பள்ளி ஸ்ரீமதி டாக்டர் ஸ்ரீவித்யாசுந்தரேசனின் ஸ்ரீபுரந்தரி நாட்டியாலயா மாணவிகளின் நடனமும் புதுச்சேரி டாக்டர் அபயகரம் கிருஷ்ணன் டாக்டர் பிரித்தா பிரபுதாஸ் ஆகியோரின் நாட்டிய சமர்ப்பணமும் அரிமளம் ஸ்ரீ வெற்றிவீர் நிருத்யாலயாவின் இயக்குநர் சதிஷ்குமார் அவரது மாணவன் கதிர்மணி நடனமும் பார்வையாளர்களை கவர்ந்தது

விழாவின்நிறைவாக தம்பிரான் சுவாமிகள் வாழ்த்தி பேசி சான்றிதழ் கேடயம் திருவாசகம் மற்றும் திருக்கோயில் வரலாறு நுால்கள் வழங்கி கவுரவித்தார்.

நிகழ்ச்சியைசென்னை ஸம்விருதா கலைக்கழக இயக்குநர் சூர்யாவிஜயன் தொகுத்து வழங்கினார் விழாவில் இசைநாட்டிய சமர்ப்பண விழாகுழு தலைவர் பாலசுப்ரமணியகுருக்கள் செயலாளர் கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: