காரைக்குடி ஜெய்ராம் திறன் மேம்பாட்டு மைய த்தின் முதலாமாண்டு பட்டமளிப்பு விழா நடந்தத ு

காரைக்குடி ஜெய்ராம் திறன் மேம்பாட்டு மையத்தின் முதலாமாண்டு பட்டமளிப்பு விழா நடந்தது

ஸ்ரீ ராஜ ராஜன் கல்விக் ஸ்ரீ ராஜ ராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இயங்கி வரும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப் பெற்ற ஜெய்ராம் திறன் மேம்பாட்டு மையத்தின் மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா ஸ்ரீ ராஜ ராஜன் பொறியியல் கல்லூரி நடந்தது.

பட்டமளிப்பு விழாவிற்கு ஸ்ரீ ராஜ ராஜன் கல்விக் குழுமத்தின் ஆலோசகர் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தருமான டாக்டர் சுப்பையா தலைமை வகித்து பேசியபோது, மாணவர்கள் பல்வேறு துறைகளில் டிகிரி பட்டம் பெற்றிருந்தாலும் தொழில் நிறுவனங்களில் சேர்வதற்கு இதுபோன்ற டிப்ளமோ மற்றும் சான்றிதழ் வகுப்புகளை வைத்துத்தான் திறன் மேம்பாடுடைய மாணவர்களை வேலைக்கு தேர்வு செய்கின்றனர் என்றார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஐ.இ.சி.டி. இயக்குனர் டாக்டர் ராம்கணேஷ் கூறியபோது கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில்சாலைகளுக்கிடையே தற்போது நிறைய இடைவெளி உள்ளது என்றும் ஆகையால் மாணவர்களுக்கு இந்த தொழில் துறை சார்ந்த வகுப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.
விழாவில் 688 மாணவர்களை கௌரவித்து பட்டம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
ஜெய்ராம் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தில் 35 திறன் சார்ந்த பயிற்சி சான்றிதழ்கள் மற்றும் டிப்ளமோ படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.
விழாவில் கல்லுாரி முதல்வர்கள் சிவக்குமார்,வாசுகி கல்வி குழுமத்தின் இயக்குனர்கள் ஜெய்ராம் முரளி ஆகியோர் கலந்து கொண்டனர் முன்னதாக ஜெய்ராம் திறன் மேம்பபட்டு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் மகாலிங்க சுரேஷ் வரவேற்றார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: