சோழவந்தான் அருகே சாலை விபத்து: இளைஞர் பல ி:

சோழவந்தான் அருகே டூவீலரில் சென்ற கல்லூரி மாணவன் அரசு பேருந்து மோதி பலி: காயங்களுடன் நண்பர் உயிர் தப்பினார்:

சோழவந்தான்:

மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்தவர், இன்பராஜ் இவரது தனது நண்பர் பரத் என்பவருடன் சோழவந்தான் அடுத்த விக்கிரமங்கலம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவர்கள் இருவரும் நாராயணபுரம் ஊத்து அருகே சென்றபோது, எதிரே வந்த அரசு பேருந்து மோதியதில் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே இன்பராஜ் பலியானார்.
அவரது நண்பர் பரத்ரிசி காயங்களுடன் உயிர் தப்பினார்.
சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற சோழவந்தான் காவல் ஆய்வாளர் சிவபாலன் சடலத்தை கைப்பற்றி, உடற்கூறு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி விசாரித்து வருகிறார்.
அரசு பேருந்து குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார். கல்லூரி மாணவன் குடும்பத்தார்கள் தீவிர சோகத்தில் அழுது புலம்பி தங்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்தினர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: