கஞ்சா விற்பனை இருவர் கைது: கார் பறிமுதல்:

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வோருக்கு எதிராக சட்டப்படி கடும் நடவடிக்கை: போலீஸ் எஸ்.பி:

மதுரை:

மதுரை மாவட்டம், சிலைமான்
காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பனையூர் ஏரியாவில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மாவட்ட தனிப்படையினர் மற்றும் காவலர்கள் சோதனையில் ஈடுபடும்போது, சட்டத்திற்குப் புறம்பாக கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த
பாலு 49, சுரேஷ் ஆகிய 2 நபர்களை கைதுசெய்து செய்தனர்.
மேலும், இது சம்பந்தமாக சிலைமான் காவல் நிலையத்தில் வழக்கு ப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர் அவர்களிடமிருந்து கஞ்சா 25 கிலோ கிராம் மற்றும் பணம் ரூபாய் 7,000 ம் அவர்கள் பயன்படுத்திய நான்கு சக்கர வாகனம், ஆகியவற்றை பறிமுதல் செய்தனர் மேலும், மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை ஈடுபடுவோர், பதுக்குவோர் மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வே.
பாஸ்கரன், எச்சரித்து உள்ளார்கள்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: