சோழவந்தானில் , சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதி மற்றும் நிர்வாகிகளுக்கு ஆலோசனை:
சோழவந்தான்:
மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சி வெற்றி பெற்ற தலைவர், துணைத் தலைவர் பேரூராட்சி கவுன்சிலர் களுக்கு, சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம்எல்ஏ ஆலோசனைகள் வழங்கினார். பேரூராட்சியில் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்தும் அதனை செயல்படுத்த அணுகுமுறை குறித்து விளக்கினார். பின்னர், வெற்றி வாய்ப்பை இழந்த கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்துவதற்கு அனைவரும் இணைந்து செயல்பட அறிவுரை வழங்கினார்.
இதில் பேரூராட்சித் தலைவர், துணைத்தலைவர் ,வார்டு கவுன்சிலர்கள், திமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.