பட்டாசு ஆலையின் உரிமம் ரத்து: ஆட்சியர்:

சாத்தூர் அருகே விபத்து நடைபெற்ற பட்டாசு ஆலையின் உரிமம் தற்காலிக ரத்து.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு…..

விருதுநகர் :

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள மேலஒட்டம்பட்டி பகுதியில் உள்ள விநாயகா பட்டாசு ஆலையில், நேற்று முன்தினம் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஒருவர் படுகாயங்களுடன் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், விபத்து நடந்த பட்டாசு ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து ஆட்சியர் மேகநாதரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: