மதுரை நகர குற்றச் செய்திகள்:

அண்ணாநகரில் நள்ளிரவில்
ஏடிஎம் மை உடைத்து கொள்ளை முயற்சி
மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு மதுரை மார்ச் 8 அண்ணா நகரில் நள்ளிரவில் ஏடிஎம்மை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது இதில் ஈடுபட்ட மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர் மதுரை அண்ணாநகர் செக்சன்ஆபீஸ் ரோட்டில் ஏடிஎம் ஒன்று உள்ளது .இதில் நள்ளிரவில் புகுந்த மர்ம ஆசாமிகள் ஏடிஎம்மை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர் .அவர்கள் கொள்ளை திட்டத்தில் ஈடுபட்டபோது ஆட்கள் நடமாட்டம் ஏற்படவே அவர்கள் கொள்ளை முயற்சியை பாதியில் விட்டுவிட்டு ஓடிவிட்டனர். அதிகாலை இந்த சம்பவம் தெரியவந்தது. இந்த கொள்ளை முயற்சி தொடர்பாக ஏடிஎம் செக்சன் மேனேஜர் கே.புதூர் பரசுராம்பட்டியை சேர்ந்த சம்சுதீன் அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
*********************************
கூடல் புதூரில்
வீடு புகுந்து தங்கம் வெள்ளி நகைகள் திருட்டு
திருட்டு ஆசாமி கைது.
மதுரை மார்ச் 8 கூடல்புதூரில் வீடு புகுந்து தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை திருடிய ஆசாமியை போலீசார் கைது செய்தனர் .
மதுரை மகாத்மா காந்தி நகர் மகாநதி தெருவை சேர்ந்தவர் விஜயலட்சுமி 47. இவர் வீட்டில் இல்லாதபோது வீடு புகுந்த மர்ம நபர் வீட்டில் பீரோவில் வைத்திருந்த செல்போன் ஒன்று கடிகாரம் ஒன்று தங்க நகை ஆறுகிராம், மற்றும் வெள்ளி நகைகளை திருடி சென்று விட்டார் .இந்த சம்பவம் குறித்து விஜயலட்சுமி கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர் .பின்னர் இந்த திருட்டில் ஈடுபட்ட முடக்கத்தான் அம்பேத்கர் காலனியை சேர்ந்த முத்து என்ற அம்பேத்கர் முத்து 44 என்பவரை கைது செய்தனர்.
*******************************
கரி மேட்டில்
வீடுபுகுந்து 55 ஆயிரம் மதிப்புள்ள செல்போன்கள் திருட்டு
ஒருவர் கைது
மதுரை மார்ச் 8 கரிமேட்டில் வீடுபுகுந்து ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள செல்போன்களை திருடிய ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
கரிமேடு மேட்டு தெரு முனியாண்டி கோவில் குறுக்கு தெருவை சேர்ந்தவர் பொன் லட்சுமி 45. இவர் வீட்டை விட்டு வெளியே சென்றிருந்த நேரம் உள்ளே புகுந்த மர்ம நபர் வீட்டில் வைத்திருந்த ரூபாய் 55 ஆயிரம் மதிப்புள்ள 2 செல்போன்களை திருடி ச்சென்றுவிட்டார் .இந்த திருட்டு குறித்து பொன் லெட்சுமி கரிமேடு போலீசில் புகார் செய்தார். இந்த புகாரை தொடர்ந்து குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வி விசாரணை நடத்தி திருட்டு ஆசாமியை தேடி வந்தார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பெத்தானியாபுரம் மேட்டு தெருவைச் சேர்ந்த வேலு மகன் சரவணகுமார் 24 என்ற வாலிபர் திருடியது தெரிய வந்தது அவரை கைது செய்தார்.
***********************************
பைக்காரா வில்
நள்ளிரவில் வீட்டின் மீது சரமாரி கல்வீச்சு மொயட்டுகளுக்கு தீவைப்பு மதுரை மார்ச் 8 பைக்காராவில் நள்ளிரவில் வீட்டின் மீது சரமாரியாக கற்களை வீசி வீட்டின் முன்பாக நிறுத்தி இருந்த மொபட்டுகளுக்கு தீ வைத்து எரித்த ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை பைக்காரா,நாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் 58. இவர் வீட்டின்மீது நள்ளிரவில் திடீரென்று மர்ம ஆசாமிகள் சரமாரியாக கற்களை வீசி தாக்கினர் .இதில் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கி சிதறின. வீட்டின் முன்பாக நிறுத்தி இருந்த இரண்டு மொபட்டுகளுக்கும் அந்த கும்பல் தீ வைத்து எரித்து விட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து பெருமாள் சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து கற்களை வீசி தீவைத்த ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
**********************/***/
பேச்சியம்மன் படித்துறையில்
நடந்து சென்றவர் மயங்கி விழுந்து பலி.
மதுரை வடக்கு மாசி வீதி சப்பானி கோவில் தெரு 2-வது தெருவை சேர்ந்தவர் பாலசுந்தரம் 42. இவருக்கு திருமணமாகி குழந்தை இல்லை .குடி பழக்கம் இருந்து வந்தது. இந்த நிலையில் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இவர் பேச்சியம்மன் படித்துறை சந்திப்பில் சென்ற போது மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி மணிமேகலை திலகர் திடல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பாலசுந்தரத்தின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
******************************
மதுரை சுற்றுலா வந்த
வடமாநில பெண்பயணி திடீர் சாவு காரணம் என்ன போலீஸ் விசாரணை .
மதுரை மார்ச் 8 மதுரைக்கு சுற்றுலா வந்த வடமாநில பெண் பயணி திடீர் என்று உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம் பல்ராம்பூரை சேர்ந்தவர் ராதிகா 53. இவர் குடும்பத்துடன் சுற்றுலாப் பயணமாக மதுரை வந்தார். கென்னட்ரோட்டில் மீனாட்சி கார் பார்க்கிங்கில் நின்றபோது அவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அவரது சகோதரி தேஸ்பான் என்பவர் கொடுத்த புகாரில் எஸ் எஸ் காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராதிகாவின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
***************************
லாட்ஜில் வைத்து பெண் பலாத்காரம் செயது கற்பழிப்பு வாலிபர் கைது.
மதுரை மார்ச் 8 லாட்ஜ் ஒன்றில் பெண்ணை அழைத்துச் சென்று பலாத்காரம் செய்து கற்பழித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை பொன்மேனி புதூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் முருகன் 25 .இவர் இளம் பெண்ணொருவரை விருதுநகரில் உள்ள லாட்ஜ் ஒன்றிற்கு அழைத்துச் சென்று அங்கு அவரை பலாத்காரம் செய்து கற்பழித்துள்ளார். இந்த சம்பவம் அந்த பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பெண்ணை கற்பழித்த வாலிபர் பவுன் முருகனை கைது செய்தனர்.
********************************
மேல பெருமாள் மேஸ்திரி வீதியில் பிச்சைக்காரரை கல்லால் தாக்கி பிச்சை பணத்தை பறித்த வாலிபர் கைது.
மதுரை மார்ச் 8 மேல பெருமாள் மேஸ்திரி வீதியில் பிச்சைக்காரரைதாக்கி பிச்சை எடுத்து பணத்தை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மேல பெருமாள் மேஸ்திரி வீதி டவுன் ஹால் ரோடு அருகே பிச்சைக்காரர் ஒருவர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார் .அவரிடம் பிச்சை எடுத்து சேர்ந்த பணமும் இருந்தன. அப்போது அந்த வழியாக சென்ற வாலிபர் ஒருவர் அவரிடம் பிச்சை எடுத்த பணத்தை கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் பிச்சைக்காரரை சரமாரியாக தாக்கி பணத்தை பறித்துக் கொண்டிருந்தார். இதை பார்த்த அந்த வழியாகச் சென்ற செல்லூர் சிவகாமி தெருவைச் சேர்ந்த பாண்டியராஜன் என்பவர் திடீர்நகர் போலீசுக்கு தகவல் தெரிவித்து புகார் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கத்தை சேர்ந்த கச்சிமீராசா மகன் அக்பர்மரைக்கான் 33 என்று தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
*******************************

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: