அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்:

திருவில்லிபுத்தூர் அருகே, அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…
சசிகலாவை மீண்டும் அதிமுக கட்சியில் இணைக்க வேண்டும் என தீர்மானம்…..

திருவில்லிபுத்தூர் :

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள வத்திராயிருப்பு பகுதியில் உள்ள வ.புதுப்பட்டியில், வத்திராயிருப்பு ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் கண்ணன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நிர்வாகிகள் பேசும்போது, அதிமுக கட்சி தொண்டர்கள் பலம் வாய்ந்த கட்சி. ஆனால் நடந்து முடிந்த தேர்தல்களில் அதிமுக கட்சியால் வெற்றி பெற முடியவில்லை. அதிமுக வெற்றி பெறுவதற்கு வலிமையான தலைமை வேண்டும். கட்சியில் ஒற்றுமை இருக்க வேண்டும். பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும். அதிமுக கட்சியில் இருந்த சசிகலா மற்றும் தினகரன் உள்ளிட்டவர்களை மீண்டும் அதிமுக கட்சியில் சேர்க்க வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகளால், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சசிகலாவை மீண்டும் அதிமுக கட்சியில் சேர்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: