ராஜபாளையம் நகர் மன்றத்துக்கு பெண் கவுன் சிலர் தலைவர்:

ராஜபாளையம் நகர்மன்ற பெண் தலைவர், ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்…..

ராஜபாளையம் :

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சி நகர்மன்ற தலைவர் தேர்தல் நகராட்சி ஆணையாளர் சுந்தரம்பாள் தலைமையில் இன்று நடைபெற்றது.
நகர்மன்றத் தலைவர் தேர்தலில், பவித்ராஷியாம் மட்டும், நகராட்சி ஆணையாளாரிடம் மனு அளித்தார். தலைவர் பதவிக்கு கவுன்சிலர்கள் யாரும் மனு அளிக்காததால்,
பவித்ராஷியாம் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். பவித்ராஷியாமிற்கு நகராட்சி ஆணையாளர் சுந்தராம்பாள் பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிய நகர்மன்ற தலைவருக்கு, கட்சி நிர்வாகிகள் மற்றும் தேர்வு செய்யப்பட்ட கவுன்சிலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: