நகராட்சி துணைத் தலைவர் கைபற்றிய திமுக:

இராஜபாளையம் நகராட்சி துணைத் தலைவருக்கு திமுகவினரிடையே போட்டி அமைச்சர் ஆதரவாளர் 31 வாக்கு பெற்று வெற்றி:

மதுரை:

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர்மன்ற தேர்தல் முடிந்த நிலையில் காலையில் நகர்மன்ற தலைவி தேர்ந்தெடுக்கப்
பட்டார். பிற்பகல் 2 மணிக்கு மேல் துணைத்
தலைவர் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. துணை தலைவர் பதவிக்காக, விருதுநகர் மாவட்ட செயலாளரும் (திமுக) அமைச்சருமான கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், பரிந்துரைக்கப்பட்ட 32-வது வார்டு கல்பனா ஒரு மனதாக வெற்றி பெற்றார் என அறிப்பு செய்யும், கடைசி நேரத்தில் 33-வது வார்டு சேர்ந்த அருள் உதயம் என்பவர் விருப்ப மனு தாக்கல் செய்தார் .
அவரை, 5 வது வார்டு கவுன்சலர் வள்ளி வழி
மொழிந்தார் .
17-வது வார்டு ஜெகதீஸ்வரி முன்மொழிந்தார். இதனால் ,தேர்தல் நடைபெறும் நிலை ஏற்பட்டது .
இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன், தென்காசி பாரளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார் ஆகியோர் நேரில் வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தையில் சமரசத்திற்கு உடன்படாத 33-வது வார்டு கவுன்சிலர் அருள் உதயம் போட்டியிடுவேன் என கூறியதால், தேர்தல் நடைபெற்றது.
40 கவுன்சிலர் பங்கேற்றனர். இதில், 31 வாக்கு கல்பனா பெற்றார் .9 வாக்கு அருள் உதயம் பெற்றார் .
துணை தலைவராக வெற்றி பெற்ற கல்பனா வுக்கு நகராட்சி ஆணையாளர் சுந்தரம்பாள் வாழ்த்து தெரிவித்தார். நகர்மன்றத் தலைவி பவித்ர ஷ்யாம் வாழ்த்து தெரிவித்தார் இதைத் தொடர்ந்து, அனைத்து கவுன்சிலர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: