முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் : இலவச கண் சிகிச்சை முகாம் :
காரியாபட்டி:
தமிழக
முதல்வர் மு.க.ஸ்டாலின் 69-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு,
மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் முடுக்கன்குளம் ஊராட்சி மன்றம் சார்பாக, இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி முத்துச்சாமி முகாமினை, தொடங்கி வைத்தார்.
முகாமில், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை டாகடர்கள் ஹேமா ஷிவானி மருத்துவக் குழுவினரால் 300-க்கு மேற்பட்ட நபர்களுக்கு கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
40 நபர்கள் அறுவை சிகிச்சைக்காக தேர்ந்தெடுக்கப் பட்டனர்.
முகாம் ஏற்பாடுகளை, முடுக்கன்குளம் சிவ ஆனந்த, அருள்மொழி வர்மன் ஆகியோர் முகாம் ஒருங்கிணைப்பாளர் லட்சுமணன் ஆகியோர் செய்திருந்தனர்.