அதிமுகவுக்கு, மாவட்டத்தில் தலைமை கிடையா து: அமைச்சர் பெரியசாமி:

அதிமுகவுக்கு எந்த மாவட்டத்திலும் தலைமை கிடையாது.
திராவிட இயக்கத்திற்கு ஒரே தலைமை மு.க.ஸ்டாலின் தான்.-அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி:

மதுரை:

சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்:
கொரோனா நான்காம் நிலை குறித்த கேள்விக்கு:

கொரோனா நான்காம் அலையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது. வெறும் ஆய்வில் தான் நான்காம் அலை வரும் என சொல்கின்றனர்.
முல்லைப் பெரியாறு விவகாரம் குறித்த கேள்விக்கு:
முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் நாம் தெளிவாக இருக்கிறோம். கலைஞரை போல முல்லைப்பெரியாறு விவகாரத்தில் முதல்வர் உறுதியாக நிற்கிறார். நம் உரிமையை நிச்சயம் விட்டுக்கொடுக்க மாட்டார். அண்டை மாநிலங்களோடு நல்ல உறவு கொண்டு நதி நீர் விவகாரத்தில் கூடுதல் பங்கீட்டை பெற நடவடிக்கை எடுப்பார்.
நகைக்கடன் தள்ளுபடி எல்லா இடங்களிலும் கொடுத்துக்
கொண்டு உள்ளோம்.
அதிமுக திமுகவில் சங்கமம் ஆகும் என பதவி மயக்கத்தில் அமைச்சர் பேசுவதாக ஒபிஎஸ் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு:
திமுகவில் இருந்து வந்தது தான் எல்லாம். எல்லோரும் தாய் கழகத்திற்கு திரும்ப வந்து கொண்டுள்ளனர். அதிமுகவுக்கு எந்த மாவட்டத்திலும் தலைமை கிடையாது.
திராவிட இயக்கத்திற்கு ஒரே தலைமை மு.க.ஸ்டாலின் தான்.
பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் முன்னிறுத்தப்
படுகிறாரா என்ற கேள்விக்கு:
தமிழகத்தின் வளர்ச்சிக்கு தன்னையே அர்ப்பணித்து கொண்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின். இந்திய அளவில் உள்ள பிரச்சனைகளுக்கு எந்த அளவில் பணியாற்ற வேண்டுமோ கலைஞரை போல செயல்பட்டு வருகிறார்.
நியாயவிலை கடைகளில் நேரம் மாற்றப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு:
மக்களின் வசதிக்காக தான் அரசாங்கம். மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க நியாய விலைக்கடைகளின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
உக்ரேனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்பது குறித்த கேள்விக்கு:
தமிழக மாணவர்களை மீட்க முழு மூச்சுடன் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: