அவனியாபுரத்தில்
சாக்கடையில் அழுகிய நிலையில் ஆண் பிணம் மீட்பு
கொலையா தற்கொலையா போலீஸ் விசாரணை.
மதுரை மார்ச் 1 அவனியாபுரத்தில் சாக்கடைக்குள் அழுகிய நிலையில் ஆண் பிணத்தை மீட்ட போலீசார் அவர் கொலை செய்யப்பட்டாரா சாவுக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் .
அவனியாபுரம் பத்மா தியேட்டர் காலனி பஸ் ஸ்டாப் அருகே சாக்கடையில் அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது .தகவலறிந்த அவனியாபுரம் விஏஓ மணிமேகலா அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சுமார் 55 வயது மதிக்கத்தக்க இறந்தவர் கொலை செய்யப்பட்டாரா யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
******************************
கே புதூர் பகுதியில்
குடி பழக்கத்தை விட முடியாமல் மனம் உடைந்த ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை .
மதுரை மார்ச் 1 கே புதூர் ராமவர்மா நகர் 5வது தெருவை சேர்ந்தவர் துரைப்பாண்டி 49. இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. குடியை மறப்பதற்கு பல வழிகளில் முயற்சி செய்தார். மறக்கமுடியவில்லை. இதனால் மனமுடைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து மனைவி மாரியம்மாள் கொடுத்த புகாரில் கே புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
**********************************
ஜெய்ஹிந்த்புரம் சோலைஅழகுபுரத்தில் புகையிலை சிகரெட் பண்டல்கள் பறிமுதல் ஒருவர் கைது.
மதுரை மார்ச் 1 ஜெய்ஹிந்த்புரம் சோலையழகுபுரம் மெயின் ரோட்டில் புகையிலைப் பொருள்கள் சிகரெட் பண்டல்களை பறிமுதல் செய்து ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
ஜெய்ஹிந்த்புரம் சோலையழகுபுரம் மூன்றாவது தெருவில் ஹோட்டல் ஒன்றின் எதிரே புகையிலை சிகரெட் பண்டல்கள் பதுக்கி வைத்திருப்பதாக சப்-இன்ஸ்பெக்டர் சோமசுந்தரத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது .அவர்சம்பவ இடத்திற்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டார். அங்கு புகையிலை சிகரெட் பாக்கெட்டுகளும் மற்றும் 15 பண்டல்கள் புகையிலை சிகரெட் பாக்கெட்டுகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்து அவனியாபுரம் எம்ஜிஆர் தெருவைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் வேல்முருகன் 39 என்ற வாலிபரை கைது செய்தார்.
*****************************
செல்லூர் கண்மாய் அருகே
கொலை ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 2 வாலிபர்கள் கைது மதுரை மார்ச் 1 செல்லூர் கணமாய் அருகே ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். செல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரீகன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அவர் குலமங்கலம் மெயின் ரோடு செல்லூர் கண்மாய் அருகே சென்றபோது சந்தேகப்படும்படியாக போலீசாரை கண்டதும் இரண்டு வாலிபர்கள் பதுங்கினர்.அவர்களை சுற்றி வளைத்து அவர் பிடித்தார்.பின்னர் அவர்களிடம் சோதனை செய்தபோது கொலை செய்யும் ஆயுதங்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தார்.அவர்களிடம் விசாரணை நடத்தியபோது செல்லூர் தியாகி பாலு தெருவைச் சேர்ந்த அருண் பாண்டி29 ,மீனாம்பாள்புரத்தை சேர்ந்த கதிரவன் என்ற குட்டை அஜித் 23 என்று தெரியவந்தது.
********************************
கேகே நகரில்
கேஸ் ஏஜென்சியை உடைத்து கொள்ளை
ஒருவர் கைது
மதுரை மார்ச் 1 கேகே நகரில் கேஸ் ஏஜென்சியை உடைத்து கொள்ளையடித்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். சமயநல்லூர் சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் மகேந்திரன்33. இவர் கேகே நகர் சுப்பையா காலனியில் உள்ள கேஸ் ஏஜென்சி நிர்வாகி ஆவார் .இவர் சம்பவத்தன்று வழக்கம்போல ஏஜென்சியை மூடிவிட்டு மறுநாள் வந்து பார்த்தபோது ஏஜென்சியின் முன் கதவு உடைக்கப்பட்டிருந்தது. ஏஜென்சிக்குள் வைத்திருந்த ரூபாய் 10 ஆயிரத்து 400 , 20 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப் 1 மற்றும் 12 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் ஒன்றையடிக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் குறித்து நாகேந்திரன் அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையடித்த நபர் யார் என்று தேடி வந்த நிலையில் சிசிடிவி பதிவுகள் முதலியவற்றை ஆய்வு செய்து பின்னர் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மானகிரியை சேர்ந்த செய்யது அலி 40 என்பவரை கைது செய்தனர்.
*********************************