கஞ்சா விற்போர் மீது கடும் நடவடிக்கை: போல ீஸ் எஸ்.பி:

மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வோருக்கு எதிராக சட்டப்படி கடும் நடவடிக்கை:

மதுரை:

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திண்டுக்கல் நான்கு வழிச்சாலை அருகே கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மதுரை மாவட்ட தனிப்படையினர் சோதனையில் ஈடுபடும்போது சட்டத்திற்குப் புறம்பாக கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த ரங்கநாதன் 21. என்பவரை கைதுசெய்து செய்தனர்.
மேலும், இது சம்பந்தமாக வாடிப்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டார். மேலும், அவரிடமிருந்து, கஞ்சா 1.6 கிலோ மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்தனர்.
மேலும், மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை ஈடுபடுவோர், பதுக்குவோர் மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
வி.
பாஸ்கரன், எச்சரித்து உள்ளார்கள்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: