மனைவி தேர்தலில் தோல்வி:கணவர் தற்கொலை:

சாத்தூர் நகராட்சி தேர்தலில் மனைவி தோல்வி, கணவர் தற்கொலை…..

சாத்தூர் :

விருதுநகர் மாவட்டம் சாத்தூர், முனிசிபல் காலனி பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (58). இவரது மனைவி சுகுணா (52). நாகராஜ், சாத்தூர் நகராட்சி அலுவலகத்தில் துப்புரவு மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார். நடந்து முடிந்த நகராட்சி தேர்தலில் நாகராஜின் மனைவி சுகுணா, 19வது வார்டில் அதிமுக கட்சி வேட்பாளராக போட்டியிட்டார். திமுக கட்சி சார்பில் சுபிதா என்பவர் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக வேட்பாளர் சுபிதா 380 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுக சார்பாக போட்டியிட்ட சுகுணா தோல்வியடைந்தார். மனைவி தோல்வி அடைந்ததையடுத்து மிகவும் மன வருத்தத்தில் இருந்த நாகராஜ், வீட்டில் வைத்து விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரது உறவினர்கள், அவரை உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சையளித்தும், சிகிச்சை பலனலிக்காமல் நாகராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சாத்தூர் நகர் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனைவியின் தேர்தல் தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாமல், கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப்பகுதி மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: