விருதுநகர் நகராட்சியை கைபற்றிய திமுக:

விருதுநகர் நகராட்சியை திமுக கைப்பற்றியது…..

விருதுநகர் :

விருதுநகர் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகள் இன்று காலை துவங்கியது. விருதுநகர் நகராட்சி வார்டுகளில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்கள் 20 வார்டுகளிலும், திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் கட்சி 8 வார்டுகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளனர். திமுக கட்சி 20 வார்டுகளிலும், அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 8 வார்டுகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு வார்டிலும் வெற்றி பெற்று, விருதுநகர் நகராட்சியை திமுக கூட்டணி கைபற்றியுள்ளது. திமுக கூட்டணி மொத்தம் 29 வார்டுகளில் வெற்றி பெற்று, நகராட்சியை கைப்பற்றியுள்ளது. அதிமுக கட்சி 3 வார்டுகளிலும், அமமுக கட்சி 1 வார்டிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். இங்கு போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் ஒரு வார்டுகளில் கூட வெற்றி பெறாமல் தோல்வியை தழுவினர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: