வேணுகோபால் சுவாமி ஆலய குடமுழுக்கு:

மந்திகுளம் வேணுகோபால சுவாமி ஆலய கும்பாபிஷேகம்:

மதுரை:

மதுரை ஊமச்சிகுளம் அடுத்துள்ள மந்திகுளம், யாதவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட வேணு கோபாலகிருஷ்ணன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
பிப்.18ம் தேதி மாலை விக்னேஷ்வரர் பூஜை, அங்குரார்பணம், பூர்ணாஹுதியுடன் முதல் கால பூஜை நடந்தது. பிப்.19ம் காலை 2ம் கால பூஜையும், மாலையில் 3ம் கால யாகசாலை பூஜையும் நடந்தது. பிப்.20ம் தேதி காலை 5.30 மணிக்கு விஷ்வரூப தரிசனம், கோபூஜை, யாத்திராதானம் முடிந்து 8.30 மணிக்கு புனித நீர் நிரப்பப்பட்ட கடம் புறப்பாடு நடந்தது. 9.10 மணிக்கு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
பின்னர், சுவாமிகளுக்கு அபிஷேகம், ஆராதனைகள் முடிந்து, அன்னதானம் நடந்தது. அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, மந்திகுளம் யாதவர் இளைஞர்கள் செய்திருந்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: