சாலை விபத்தில் பொறியாளர் மாணவர் சாவு:

திருவில்லிபுத்தூர் அருகே சாலை விபத்து..
ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த பொறியியல் மாணவர் பரிதாப பலி…..

திருவில்லிபுத்தூர் :

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் பகுதியில், தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் ஆந்திரா மாநிலம், கோதாவாரி மாவட்டத்தைச் சேர்ந்த மனோஜ் (20), குளிப்பாட்டுப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஜெயபால்சன் (20), கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீன் (19) ஆகிய 3 பேரும் படித்து வருகின்றனர். 3 பேரும் கிருஷ்ணன்கோவில் அருகே வாடகை வீட்டில் தங்கியபடி, கல்லூரிக்கு சென்று வந்துள்ளனர். நேற்று விடுமுறை நாள் என்பதால், நண்பர்கள் 3 பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் வத்திராயிருப்பு சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேன் ஒன்று எதிர்பாராத விதமாக, இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேரும் சிக்கி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். படுகாயமடைந்த ஜெயபால்சன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்து கிடந்த மனோஜ், பிரவீன் இருவரையும் அருகிலிருந்தவர்கள் மீட்டு திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து கிருஷ்ணன்கோவில் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: