மதுரை வண்டியூர் கண்மாயில் உள்ள ஆகாயத் தாமரையை அகற்ற சமூக ஆர்வலர்கள் கோரிக்கை:
மதுரை:
மதுரை வண்டியூர் கண்மாயில் பல வருடங்களாக, கண்மாயின் உள் பகுதிகளில், ஆகாயத் தாமரை படர்ந்துள்ளது.
இதனால், மதுரை கே.கே. நகர் சுந்தரம் பார்க் அருகே விஷபூச்சிகள் அப் பகுதியில் தங்க வாய்ப்புள்ளதாம்.
இப் பகுதியில் தான், தினசரி அதிகாலை முதலே நடைபயிற்சியை ஏராளமானோர் மேற்கொள்கின்றனர்.
மேலும், இங்குள்ள பூங்காவில், குழந்தைகளும் வந்து விளையாடுகின்றனராம்.
ஆகவே, மதுரை பொதுப்பணித் துறையினர், வண்டியூரில் கண்மாயில் உள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றி, படகு சவாரி விட்டால், அரசுக்கு வருவாய் கிடைப்பதுடன், கண்மாயும் மாசுபடுவது தடுக்கப்படும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.